style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரபேல் போர்விமானம் வாங்கியதில் பாஜகஅரசு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது இந்நிலையில் மராட்டியமாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்திடம் ரபேல் போர்விமான குற்றசாட்டு தொடர்பாக காங்கிரஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடிவழக்கு தொடுக்குமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
இந்தியாவில் எதற்கு எடுத்தாலும் வழக்கு போடுவது என்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது என்று கூறிய சிதம்பரம் ரபேல் போர் விமானம் குறித்து விவாதம் நடத்த வேண்டிய இடம் நீதிமன்றம் அல்ல பாராளுமன்றம் ஏனெனெனில்அங்குதான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர் எனக்கூறினார்.
மேலும் ரபேல் போர்விமானம் கொள்முதலை அவரச கொள்முதல் என்று பாஜக கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இது குறித்த விவாதத்தில் பாஜகவிடம் இருந்துசரியான பதில்கள் வராவிட்டால் இது ஊழல்தான் என்று முடிவுக்கு வரவேண்டும் எனக்கூறியுள்ளார்.