Skip to main content

இந்திய விமானப்படை நடத்தியத் தாக்குதலில் 170 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்... இத்தாலி பத்திரிக்கையாளர் அதிரடி பேட்டி!

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

ஜம்மு&காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை பிப்ரவரி -26 ஆம் தேதி பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் அமைந்துளள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதலை நடத்தியது. பிறகு இந்தியா சார்பில் அளித்துள்ள விளக்கத்தில் விமானப்படை நடத்திய பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை உயிரிழந்துள்ளனர் என அறிவித்தது. ஆனால் இதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இத்தாலி பத்திரிக்கையாளர் பிரான்செஸ்கா மரினோ இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து சில தகவல்களை வெளியிட்டார்.

 

 

airforce

 

 

அதில் இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 130 பேர் முதல் 170 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். அதே போல் காயமடைந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், உயிரிழந்த தீவிரவாதிகளில் 11 பேர் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பவர்கள் என்று மரினோ கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாலகோட் மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவுடன் தீவிரவாத பயிற்சி முகாம் இறங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நானே முழுக்க முழுக்க செய்திகளை சேகரித்ததாக பத்திரிகையாளர் மரினோ தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு  மேலும் நெருக்கடியை ஏற்படுத்திருக்கிறது. இது தொடர்பாக ஐநா சபை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

oxygen cylinders arrived chennai airport

 

இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி போடும் பணிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் ஆகியோருடன் கரோனா தடுப்பூசிகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

அதேபோல் மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய அமைச்சரவையின் செயலாளர் உள்ளிட்டோரும் மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

oxygen cylinders arrived chennai airport

 

இருப்பினும், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தியாகும் மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பும் பணியை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்தப் பணியில் இந்திய விமானப் படையின் விமானங்களும் ரயில்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் டேங்கர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு விமானம் மூலம் அனுப்பி வருகின்றன. இதனை, அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து அனுப்பி வருகிறது. 

oxygen cylinders arrived chennai airport

 

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டின் லண்டனிலிருந்து 46.6 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று (04/05/2021) அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தன. லண்டனில் இருந்து எகிப்து வழியாக விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

துல்லியத் தாக்குதலும் காணாமல் போன விமானப்படை விமானமும்!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே இந்திய ராணுவ அணிவகுப்புக்கு ஊடாக பயங்கரவாதியின் வாகனம் புகுந்து வெடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
 

balkot

 

 

இந்தத் தாக்குதலை தடுக்க மத்திய அரசுக்கு துப்பில்லையா என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான விமர்சனமாக அடிக்கடி குறிப்பிட்டார். நாடு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதைப் போல அவர் தொடர்ந்து பேசினார்.
 

2019 ஏப்ரல் 11 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி 300 பயங்கரவாதிகளை கொன்றதாக மத்திய அரசு அறிவித்தது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 300க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மோடி அறிவித்தார்.
 

ஆனால், வெற்றிடத்தில்தான் இந்திய விமானங்கள் குண்டுவீசியதாகவும், யாரும் பலியாகவில்லை என்றும் பாகிஸ்தான் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்திய விமானங்கள் குண்டுவீசிய பகுதிக்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துப்போய் காட்டினார்கள். அந்த இடத்தில் மிகப்பெரிய பள்ளமே காணப்பட்டது.
 

narendra modi


இந்தத் தாக்குதலையே மோடி தனது தேர்தல் பிரச்சார வீராவேச உரைகளில் தவறாது குறிப்பிட்டார். கடைசியாக, இந்தத் தாக்குதலுக்கு விமானப்படை அதிகாரிகளுக்கு நேரம் குறித்துக் கொடுத்ததே தான்தான் என்று மோடி ஒரு தகவலை வெளியிட்டார். வானம் மேக மூட்டமாக இருப்பதால், பாகிஸ்தான் ரேடார்களில் இருந்து இந்திய விமானங்கள் எளிதில் தப்பலாம் என்ற யோசனையை விமானப்படை தளபதிகளுக்கு சொன்னதாக கூறினார் மோடி. இது நகைப்புக்குரிய விஷயமாக இருந்தாலும், வட மாநிலங்களில் உள்ள அப்பாவி மக்கள் இதை மோடியின் புத்திகூர்மையாகவே பார்த்தனர். மேகம் இருந்தால் ரேடாரில் விமானம் தப்பலாம் என்று சொல்லுமளவுக்குத்தான் நமது பிரதமரின் அறிவு இருப்பதை கற்றறிந்தோர் மட்டுமே விமர்சனம் செய்தனர். அபிநந்தன் சென்ற விமானத்திற்கு ஏன் மோடி வழிகாட்டவில்லை என்றும் அவர்கள் வினா எழுப்பினார்கள்.
 

இந்திய விமானப்படை விமானங்கள் எதிரி நாட்டு ரேடார்களிடம் இருந்து தப்பிக்க நேரம் பார்த்து சொன்ன பிரதமர் மோடி, இரண்டாம் முறையாக சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக பொறுப்பேற்றார். இந்தத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களை வைத்து எதிர்க்கட்சிகள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
 

missing flight

 

 

இந்நிலையில்தான் ஜூன் 3 ஆம் தேதி திங்கள் கிழமை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 வகை சரக்கு விமானம் 13 விமானிகளுடன் அருணாச்சல பிரதேசத்துக்கு புறப்பட்டது. ஆனால் அந்த விமானம் திடீரென காணாமல் போனது.
 

காணாமல் போய் நான்கு நாட்கள் ஆன நிலையிலும் அந்த விமானத்தை, அதுவும் இந்திய எல்லைக்குள் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க மோடியிடம் ஏதும் சிறப்பு யோசனைகள் இருக்கின்றனவா என்பதை அதிகாரிகள் யாரும் வினவவில்லை போல.
 

மேகமூட்டமாக இருந்தால், இந்திய ரேடார்களிடம் வெளிநாட்டு விமானங்கள் தப்பிக்கவும் சேர்த்தே யோசனை சொன்னவர் மோடி. ஆனால், நமது நாட்டு விமானங்கள் நமது எல்லைக்குள் காணாமல் போனால் கண்டுபிடிப்பது எப்படி என்பதை அறியாமலா இருப்பார்.
 

வான் வழியாகவும், தரை வழியாகவும் நான்கு நாட்கள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு மலேசியா பயணிகள் விமானம் ஒன்று தெற்கு சீன கடல்மீது பறந்த நிலையில் திடீரென்று காணாமல் போனது. அந்த விமானம் குறித்த சிறு தடயம்கூட கிடைக்கவில்லை.
 

அதுபோலவே இப்போது இந்திய விமானப்படை சரக்கு விமானமும் இந்திய ரேடார்களைத் தப்பி மர்மமான முறையில் மாயமாய் மறைந்திருக்கிறது. இன்றைய நிலையில் ரஃபேல் விமானங்கள் வாங்குவதைக் காட்டிலும் காணாமல் போகும் விமானங்களை கண்டுபிடிக்கும் நவீன கருவிகளை வாங்குவதே இந்திய விமானப்படைக்கு உதவியாக இருக்கும்.