Advertisment

கரோனாவில் இருந்து மீண்ட நபர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு...

இந்தியா வந்த இத்தாலி சுற்றுலாப் பயணி ஒருவர் கரோனாவில் இருந்து மீண்டு நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளார்.

Advertisment

Italian tourist who had recovered from COVID-19 passed away

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தலா ஒருவர் என நான்கு பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா வைரசிலிருந்து மீண்டு வந்த 69 வயதான இத்தாலியச் சுற்றுலாப் பயணி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலியால் இறந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்ததை அடுத்து, தனியார் மருத்துவமனைக்கு மாறியுள்ளார். இந்நிலையில் அங்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe