Advertisment

“இது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடுவதாக இருக்கும்” - பிரதமர் மோடி ட்வீட்

உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இலக்கியம், ஆன்மீகம், கலை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியை அரசுஏற்பாடு செய்துள்ளது.

Advertisment

இது குறித்து, டிவிட்டரில்பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் மீது எனக்கு பேருவகை ஏற்பட்டுள்ளது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வின் கொண்டாட்டம் மற்றும் அழகான தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைகொண்டாடுவதாக இருக்கும்’எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe