vishwa deenadayalan

தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Advertisment

83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் செல்லும் வழியில் இந்த சாலை விபத்தானது நடந்துள்ளது. விஸ்வா தீனதயாளன் பயணித்த கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி மோதி இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் விஸ்வா தீனதயாளன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த இளம் வீரர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வளர்ந்து வரும் இளம் சாதனையாளரான விஸ்வா தீனதயாளன் மரணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரதிர்ச்சியாக உள்ளது. அவரது மரணம் மிகுந்த வலியைத் தருகிறது. அவரது குடும்பத்தினர், நன்பர்கள் மற்றும் சக வீரர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.