Advertisment

விஜய் பட தயாரிப்பாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு

nn

Advertisment

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 8 க்கு மேற்பட்ட இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. கடந்த பொங்கலுக்கு ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்' படத்தின் தயாரிப்பாளர்தில் ராஜு ஆவார். அதேபோல் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தையும் இவர் தயாரித்திருந்தார். பல்வேறு பிரபல நடிகர்கள் படங்களை தயாரித்த தில் ராஜ் தொடர்புடைய எட்டு இடங்களில் 55 பேர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe