ELECTION

Advertisment

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கர்நாடக தேர்தல் அறிவிப்பால் காவிரி வாரியம் அல்லது ஏதேனும் அமைப்பு அமைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகயுள்ளன. அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரும் என தெரியவருகிறது.

அவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறை அமலானால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.