Skip to main content

''அதை மக்களிடம் திணிக்க முடியாது''- ப.சிதம்பரம் விமர்சனம்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

 "It cannot be imposed on the people" - P. Chidambaram's review

 

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து தெரிவிக்கையில், “வெளிப்படையாக பார்த்தால் குடும்பத்தையும் நாட்டையும் குறித்த பிரதமரின் ஒப்பீடு உண்மை போல் தோன்றும். ஆனால் எதார்த்தத்தில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒரு குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சட்ட சான்றாவணம் என்ற அரசியலமைப்பால் நாடு இணைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் கூட வேற்றுமைகள் உண்டு. மக்களுக்குள் உள்ள பன்முகத்தன்மையையும் வேற்றுமையையும் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு விருப்பம். ஆனால் அதை மக்களிடம் திணிக்க முடியாது. நிர்வாகத்தில் தோல்வி அடைந்த அரசு, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது” எனக் கூறினார்.

 

இதேபோல் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது மோடி எதற்காக குற்றம் சாட்டுகிறார் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்