கதச

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், பல நாடுகள்முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.

Advertisment

இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் இந்த தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது. 100 நாட்களைக் கடந்து இந்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவந்தாலும், இந்தியாவில் 20 சதவீத பேருக்கு கூட இன்னும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதற்கிடையேதடுப்பூசி தொடர்பாக பேசிய சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனாவாலா, “இந்தியாவின் மக்கள் தொகையைக் கணக்கில்கொண்டால் அனைவருக்கும் தடுப்பூசி போட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம்” என்று தெரிவித்துள்ளார்.