Advertisment

இஸ்ரோவின் அடுத்த இலக்கு-ரெட் சிக்னல் கொடுத்த மத்திய அமைச்சரவை

moon

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஆண்டுஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தொடர் முயற்சியால் இறுதிக்கட்டத்தை எட்டி, திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் 14/09/2023 அன்று இறங்கி சாதனை படைத்தது. இதனால் நிலவில் தென் துருவத்தில் முதன் முதலில் கால் பதித்து சாதித்து காட்டியது இஸ்ரோ.

Advertisment

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைமையில் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் ஆராய்ச்சிகளை செய்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக நிலவிலிருந்து பாறைகள் மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு வரும் திட்டமான சந்திரயான்-4 திட்டத்திற்கு தற்பொழுது மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

Advertisment

நிலவிலிருந்து பாறைகள் மற்றும் மண்ணில் பூமிக்கு கொண்டு வரும் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-4 திட்டம் கொண்டுவரப்பட்டது. வரும் 2028 ஆண்டுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் வெள்ளி கிரகத்தில் ஆய்வு செய்வதற்கும் இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி கொடுத்துள்ளது.

ISRO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe