Advertisment

விண்வெளித்துறையில் இந்தியா படைத்த உலக சாதனை...

ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. -சி45 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. இதில் இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக பயன்படும் எமிசாட் உட்பட 28 வெளிநாடு செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

Advertisment

isro succesfully launched emisat by pslvc45

இந்த ஆண்டில் இஸ்ரோ ஏவிய இரண்டாவது ராக்கேட்டான இது உலகிலேயே முதன்முறையாக வெவ்வேறு புவிவட்டப் பாதையில் 3 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தியுள்ளது. இதில் 436 கிலோ எடை உள்ள எமிசாட் செயற்கைக்கோள் மூலம் மின்காந்த அலைக்கற்றைகளை கண்காணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் இந்த சாதனை உலக விண்வெளி துறையில் ஒரு மிக பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இஸ்ரோவின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ISRO pslv
இதையும் படியுங்கள்
Subscribe