ADVERTISEMENT

அறிவியலில் முடிவுகளை தேடக்கூடாது மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச் செல்லும்-இஸ்ரோ சிவன் 

09:09 PM Sep 07, 2019 | kalaimohan

வரும் 14 நாட்களுக்கு சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவின் தென்துருவத்தில் 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் தகவல் துண்டிக்கப்பட்டது. இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன்,

ADVERTISEMENT

ADVERTISEMENT


சந்திரயான்-2 திட்டத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. வரும் 14 நாட்களுக்கு சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிப்போம். அறிவியலில் முடிவுகளை தேடக்கூடாது மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச் செல்லும். ககன்யான் திட்டதிற்காக முழுமையாக தயாராகி வருகிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு ஊக்கம் மற்றும் ஆதரவு தரும் சக்தியாக உள்ளார் எனக் கூறிய அவர்,

மேலும் சந்திரன் குறித்த ஆய்வுகள் தொடரும். ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஒரு ஆண்டு என்றாலும் கூடுதல் எரிபொருளால் 7.5 ஆண்டுகள்வரை செயல்பட வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT