Advertisment

புத்தாண்டு தினத்தில் சாதனை படைக்கவிருக்கும் இந்தியா!

ISRO is going to make a record on New Year's Day!

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை நடத்தியது. இதனைத்தொடர்ந்து, இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1-ஐ அனுப்பி அடுத்த சாதனையை நிகழ்த்தியது.

Advertisment

விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் சார்பில் ‘எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரேல் வடிவமைத்திருந்தது. மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.

Advertisment

இந்த ஆய்வு நடவடிக்கைகளை எடுப்பதற்காக ‘எக்ஸ்பெக்ட்’(எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டர்) ஆகிய 2 அதிநவீன சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை, விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிர்களின் (எக்ஸ்ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருத்துக்களை வாயுக்களின் திரள் உள்பட பலவற்றை ஆராய உள்ளது. மேலும், இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ஏற்கனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன்‘பிஎஸ்எல்வி சி -58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (01-01-24) காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று (31-12-23) காலை 8:10 மணிக்கு தொடங்கியது.

pslv satellite Rocket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe