நிலவில் ஆய்வு செய்ய சந்திரயான்- 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 06.51 மணியளவில் தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை அதிகாலை 02.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதிக எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது சந்திரயான் 2 விண்கலம். நிலவில் தென் துருவ பகுதியை ஆராயும் சந்திரயான் 2 விண்கலத்தை உலகிலேயே முதன் முறையாக இந்தியா தான் ஏவவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

isro chandrayaan 2 mission pslv mark 3

Advertisment

சந்திரயான் 2 விண்கலத்தில் மூன்று முக்கிய தொழில் நுட்பங்கள் அனுப்பப்படவுள்ளன. அவை ரோவர், லேண்டர், ஆர்பிடர் ஆகும். இந்த தொழில் நுட்பங்கள் நிலவில் மேற்பரப்பையும், நிலவை சுற்றியும், நிலவில் தரையிறங்கியும் ஆராயும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 1000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டால், விண்வெளி துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாய் திகழும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் நிலையில், இன்று இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று பார்வையிடுகிறார் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.