தற்போதைய நிலையில் உலக விண்வெளி துறையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது இந்தியாநிலவுக்கு அனுப்ப இருக்கும் சந்திராயன் 2 விண்கலம் தான்.
ஏற்கனவே அனுப்பப்பட்ட முதல் சந்திராயன் வெற்றிகரமாக செயல்பட்ட நிலையில், இந்த சந்திராயன் 2 நிலவின் பரப்பில் இறங்கி அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உள்ளது. வரும் 15 ஆம் தேதி சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இஸ்ரோ அமைப்பின் தலைவரான சிவன், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். குடும்பத்துடன் கோவிலில் வழிபாடு செய்த சிவன், சந்திராயனின் வெற்றிக்காக பிரார்தித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி ஏவப்படும் சந்திராயன் 2 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும்பட்சத்தில் நிலவின் தரைப்பரப்பில் தடம் பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.