ADVERTISEMENT

தனிமை வார்டுகளுக்காகத் தயாரானது ரயில் பெட்டிகள்...

12:01 PM Mar 28, 2020 | kirubahar@nakk…

கரோனா பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காகத் தனிமை வார்டுகளுக்கான தேவை ஏற்படும்பட்சத்தில் அதனை ஈடுகட்டும் விதமாக ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,341 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 800 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தனிமைப்படுத்தும் வார்டுகள் அமைப்பதில் இந்தியாவில் சிக்கல் நிலவி வருகிறது.

1000 பேருக்கு மூன்று தனிமை படுக்கைகள் அமைக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வரும் சூழலில், இந்தியாவில் படுக்கை வசதிகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து படுக்கை வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் கரோனா தனிமை வார்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் ரயில் பெட்டிகளை, கரோனா தனிமை வார்டுகளாக மாற்றித்தர ரயில்வே முன்வந்தது. இதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரயில் பெட்டிகளில் ஒரு பக்கத்திலிருக்கும் நடுவரிசை பெர்த்கள் அகற்றப்பட்டு, அதன் எதிர் வரிசையில் உள்ள 3 பெர்த்களும் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல பெர்த்களில் ஏறுவதற்கான அனைத்து ஏணிகளும் அகற்றப்பட்டுள்ளன. மேலும், நோயாளியின் வசதிக்காகக் குளியலறைகள் மற்றும் கழிவறை பகுதிகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT