Advertisment

இந்தியாவில் கால்பதித்த ஐ.எஸ் அமைப்பு..? செய்தி குறிப்பு மூலம் அறிவிப்பு...

சிரியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தெற்கு சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியது. அதன் பின் ஈராக்கிற்குள் நுழைந்த இந்த அமைப்பு அங்கு இரண்டு முக்கிய நகரங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனையடுத்து ஐஎஸ் அமைப்பு ஓரளவு ஒடுக்கப்பட்டு பெருவாரியான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது.

Advertisment

ISIS announces new 'branch' in India after clashes in Kashmir

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையுடன் சண்டை நடந்ததாகவும், அதில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது. இது தொடர்பாக இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில் நடந்த சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐஎஸ் அமைப்பு தனதுசெய்தி தொடர்பு நிறுவனம் மூலம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் "இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் "ஹிந்த் இன் வாலே" என அந்த பகுதிக்கு பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள ஜம்மு காஷ்மீர் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஐஎஸ் அமைப்பின் இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்.

jammu and kashmir isis
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe