Advertisment

அதிர்ச்சியடைய வைக்கும் அம்பானி வீட்டு திருமணத்தின் மொத்த செலவு

amb

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் திருமணம் இன்று அவர்களது இல்லத்தில் நடைபெற உள்ளது. கடந்த 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் உதய்பூரில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றன. இதற்காக 1000 வெளிநாட்டு கார்கள், 50 விமானங்கள் வாடைகைக்கு எடுக்கப்பட்டன. மேலும் 5100 ஏழை மக்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டது. இதில் அயல்நாட்டு தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இன்று இவர்களது திருமணம் அம்பானியின் இல்லத்தில் நடைபெறுகிறது. இதற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணத்திற்கு ஆனமொத்த செலவு 710 கோடி என தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் அதிக பொருட்செலவில் செய்யப்பட்டது இந்த திருமணம் தான். ஏற்கனவே திருமணத்திற்கு பின் இவர்கள் வசிக்க 450 கோடியில் பிரம்மாண்ட வீடு வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

India marriage isha ambani mukesh ambani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe