Advertisment

லட்சங்களை தாண்டிய அம்பானி வீட்டு திருமண புகைப்படங்கள்

amb

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின்மகளான ஈஷா அம்பானியின் திருமணம் கடந்த வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 710 கோடி செலவில், பாலிவுட் நட்சத்திரங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்கள் என பலர் கலந்துகொண்ட இந்த திருமணம் அனைத்து விதத்திலும் பிரமாண்டத்தை பிரதிபலித்தது. இதன் பிரம்மாண்டங்களை மீறி பெரும் பேசுபொருளாக இருந்த விஷயம் இந்த திருமணத்தின் புகைப்படங்கள். திருமணத்தின் பிரம்மாண்டத்தையும், அழகையும் அப்படியே படம்பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

Advertisment

இது குறித்து, இந்த புகைப்படங்களை எடுத்த கர்நாடகாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் விவேக் செகுயிரா கூறுகையில், 'இந்த திருமணத்திற்காக என்னை ஜூன் மாதமே ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அது அம்பானி இல்ல திருமணம் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. இது பற்றி தெரிந்த பின்னர் அதனை நம்ப எனக்கு 2 நாட்கள் ஆனது. திருமணம், அதற்கு முந்தைய சடங்குகள் என அனைத்து நிகழ்வுகளையும் சேர்த்து 1.2 லட்சம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது' என கூறினார். மேலும் தன் வாழ்வில் அதிகமான புகைப்படங்கள் எடுத்த திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என அவர் கூறினார்.

Advertisment

isha ambani ambani mukesh ambani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe