இந்திய வம்சாவளியை சேர்ந்த அயர்லாந்து நாட்டின் பிரதமரான லியோ வராட்கர் இன்று இந்தியாவில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு வருகை தந்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
மகாராஷ்டிராவில் உள்ள சிந்து துர்க் மாவட்டத்தின் வாராட் கிராமத்தை பூர்விகமாக கொண்ட இவரது குடும்பம்கடந்த 1960 ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் குடியேறியது.இவர் அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவராக மாறியதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்றார். இந்த நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள அவர், குடும்பத்தினருடன் தனது தந்தை வசித்த கிராமத்துக்குச் சென்று அங்குள்ள கோயிலில் வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் குடும்பத்தின் 3 தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தந்தையின் சொந்த ஊருக்கு வந்துள்ளது மிகவும் சிறப்பான தருணம் என்றார்.