Advertisment

'ஐ.ஆர்.சி.டி.சி.' மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!

IRCTC Launches Online Bus Booking Services

Advertisment

இந்திய ரயில்வேக்குச் சொந்தமான 'ஐ.ஆர்.சி.டி.சி.' செயலி ('Indian Railway Catering and Tourism Corporation Limited'- IRCTC APP) மூலம் இனி நாடு முழுவதும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. செயலியில் பேருந்து முன்பதிவு செய்யும் வகையில், செயலி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறுமாநிலப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி. ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. செயலி மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்வது?

Advertisment

ஆண்ட்ராய்டு செல்ஃபோனில் கூகுள் பிளே (Google Playstore) அல்லது ஆப்பிள் செல்போனில் ஐஓஎஸ் (iOS)- செயலிக்குச்சென்று ஐ.ஆர்.சி.டி.சி. செயலி (IRCTC APP)- என்று டைப் செய்து செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு, ஒருமுறை நிரந்தரப் பதிவை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு, எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, பேருந்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தபிறகு இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு, டிக்கெட்டைப் பதிவு செய்துகொள்ளலாம்.

அதேபோல், https://www.bus.irctc.co.in/home என்ற இணையதளத்திற்குச் சென்றும் பேருந்து டிக்கெட்டுகளை பொதுமக்கள் எளிதாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஏற்கனவே விமான டிக்கெட், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

bus ticket IRCTC online ticket booking
இதையும் படியுங்கள்
Subscribe