Skip to main content

புது அறிவிப்பை வெளியிட்ட ஐ.ஆர்.சி.டி.சி

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

IRCTC issued a new notification

 

நவராத்திரிக்காக விரதம் இருக்கும் பயணிகளுக்கென ஸ்பெஷல் உணவு ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. வீரட் தாலிஷ் என்ற பெயரில் வழங்கப்பட இருக்கின்ற இந்த உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 ரயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ரயில் பயணிகளுக்கு இந்த உணவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே ரயில்வே துறையில் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட  அதிவிரைவு ரயில்கள் புறப்பட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி; எதிர்பாராத விதமாக நடந்த சோகம்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Airborne tragedy in gaza by america

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் ஒரு பத்திரிகையாளரின் குடும்பமே உயிரிழந்தது. அதனை அவரே செய்தி சேகரிப்பின் நேரலையில் கூறியது பலரையும் கலங்க வைத்தது. 

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை கொல்லும் வரை தங்களின் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்திருந்தார். அதன் காரணமாக காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேலிய படை தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்த போர் குறித்து ஐ.நா கூறுகையில், ‘இஸ்ரேல் - காசா இடையே நடைபெறும் போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் நடப்பது கொடுமையாக இருக்கிறது. காசா பகுதியில் 4இல் ஒருவர் பசியால் வாடுகிறார்கள்’ என்று கூறி கவலை தெரிவித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, காசா மக்களுக்கு வான்வழி உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. 

Airborne tragedy in gaza by america

அந்த வகையில், நேற்று (09-03-24) காசாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாதி என்ற இடத்தில் உள்ள மக்களுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொருட்களை அமெரிக்கா விநியோகம் செய்து கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாராசூட் விரியாமல் திடீரென பழுதானது. இதனால் அந்த பாராசூட், உணவுப் பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் குறித்து காசா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து, காசா செய்தித் தொடர்புத்துறை கூறுகையில், ‘இந்த திட்டத்தை பற்றி முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் நூதன முறையில் மோசடி!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
issue for through the IRCTC website

சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (வயது 51) என்பவர் ரயில் மூலம் நாகர்கோயில் செல்லவிருந்த தனது ரயில் பயணத்தை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரத்து செய்துள்ளார். அப்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் உதவிக்கு (FOR HELP) என்று இருந்த 9832603458 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது ரயில் பயண கட்ட பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர் முனையில் பேசியவர் ஸ்ரீதரனின் ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். அதனை நம்பி ஸ்ரீதரனும் தனது ஏடிஎம் கார்டு விவரங்களை கூறி உள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்த எண்ணை ரயில்வே நிர்வாகம் பதிவிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. எனவே ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என வடபழனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.