df

கரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்தியாவில் கரோனா தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதை தடுக்கபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும், அதனை கட்டுப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம்ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.