அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisment

ipac joins hands with aam aadmi party in delhi

டெல்லியில் தற்போது ஆட்சி செய்துவரும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து அடுத்த ஆண்டு நடக்க போகும் சட்டப்பேரவை தேர்தலில் டெல்லியை கைப்பற்ற முக்கிய கட்சிகள் அனைத்தும் திட்டங்களை வகுக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். "அடுத்த ஆண்டு நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இருப்பார்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனமும் ட்வீட் செய்துள்ளது.