ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

INX MEDIA SCAM P CHIDAMBARAM BAIL CASE DELHI HIGH COURT

Advertisment

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21- ஆம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாளை (15/11/2019) தீர்ப்பு வழங்குகின்றனர். மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் நாளை ஜாமீன் வழங்கினால் திகார் சிறையில் இருந்து சிதம்பரம் வெளியே வரலாம்.