2007- ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் நேற்றிரவு அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ப.சிதம்பரத்திடம் 12 கேள்விகளை சிபிஐ எழுப்பியதாகவும், அந்த கேள்விகளில் 6- க்கு மட்டும் ப.சிதம்பரம் பதிலளித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மதியம் 03.00 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ உறுதியாக இருப்பதாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைத்தார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் வாதிட்டனர். அப்போது ப.சிதம்பரமும் தனது வாதத்தை நீதிபதியிடம் முன்வைத்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
அதில் எனது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் ஏற்கனவே சிபிஐயிடம் கொடுக்கப்பட்டதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.மேலும் ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். ப.சிதம்பரம் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகம் முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் (ஆகஸ்ட்- 26) நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி அனுமதி வழங்கி அதிரடி உத்தரவு.