style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காஷ்மீரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்குக் காஷ்மீரிலுள்ளபாரமுல்லா மாவட்டத்தில் உஸ்காரா எனும் குக்கிராமப்பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் சமீர் அஹமத் டார் எனும் ஆயுதப்படை காவலர்ஒருவர், சந்தேகத்திற்கு இடமான வகையில் காஸி ஹமாம் பாரமுல்லாவில் நடமாடிக்கொண்டிருந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர்.
இதனை அடுத்து அங்குள்ள அக்கம்பக்கத்தினர் விசாரித்ததில் தனியாக இருந்த பெண்ணிடம் வீட்டில் அத்துமீறி நுழைந்துஅந்த காவலர் அந்த பெண்ணிடம்ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபர் அங்குள்ள நபர்களால் அடித்து இழுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டார். அதன்பின் மேற்கொண்ட விசாரணையில் அவன் ஜம்மு காஷ்மீர் காவல் துறையில் ஆயுதபாதுகாப்பு பிரிவில் காவலராக பணியிலுள்ளவர்என தெரியவந்தது. போலீசார் அவர்மீது பெண்ணை ஆபாசமாக பேசியது தொடர்பாகவழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்தனர்.