Advertisment

மது பிரியர்களுக்காக புதிய செயலி அறிமுகம்!

Introducing a new app for wine lovers in chattisgarh

சத்தீஸ்கரில், மதுபான நுகர்வோர் வசதிக்காக புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சத்தீஸ்கர் மாநிலத்தில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநில கலால் துறை, மது பிரியர்களுக்காக ‘மன்பசந்த்’ என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம், வாடிக்கையாளர்கள் மதுபானம், மதுக்கடைகள், பிராண்டுகள் மற்றும் விலை தொடர்பான தகவல் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வாடிக்கையாளர்கள் மதுபானக் கடையில் தங்களுக்குப் பிடித்த பிராண்ட் கிடைக்காத பட்சத்தில், இந்த செயலி மூலம் கலால் துறைக்குத் தெரிவிக்கலாம். மேலும், இந்த செயலி மூலம் கடைகள் தொடர்பான புகார்களையும் கலால் துறைக்கு பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில கலால் துறை, மது பிரியர்களின் வசதிக்காக இந்த செயலி அறிமுகத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

liquor chhattisgarh chattisgarh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe