Advertisment

சாக்கடையில் விழுந்த கஞ்சா போதை இளைஞர்; நீதிபதி வீட்டில் தஞ்சம்; துரத்திப் பிடித்த போலீசார்

Intoxicated youth who fell into the gutter; sheltered at the judge's house; Chased by the police

கஞ்சா போதையில் இருந்த இளைஞரைப் போலீசார் துரத்திச் சென்றபோது போதை இளைஞர் சாக்கடையில் விழுந்ததோடு நீதிபதியின் வீட்டில் உள்ளே ஒளிந்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

Advertisment

புதுச்சேரி மாநிலம் ஜீவா நகரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கீழ்ப் பகுதியில் சுமார் ஐந்து இளைஞர்கள் கஞ்சா புகைப்பதாக போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. உடனடியாக போதைத்தடுப்புப் பிரிவு போலீசார் அந்தப் பகுதிக்குச் சென்ற பொழுது, இளைஞர்கள் தலை தெறிக்க அங்கிருந்து ஓடினர். அதில் ஒரு இளைஞரைப் போலீசார் துரத்திக் கொண்டு ஓடிய பொழுது சாக்கடையில்தவறி விழுந்தார். பின்னர் சாக்கடையிலிருந்து எழுந்தஇளைஞர் அருகிலிருந்த நீதிபதி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார். பின் தொடர்ந்து சென்ற போலீசார் அந்த இளைஞரைப் பிடித்தனர். விசாரணையில் அந்த இளைஞர் பெரியார் நகரைச் சேர்ந்த அரவிந்த் என்பது தெரியவந்தது. அந்த இளைஞரை அருகிலிருந்த பக்கெட் தண்ணீரில் குளிப்பாட்டி ஆட்டோவில் ஏற்றி விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

Advertisment

Cannabis police Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe