Advertisment

மது குடிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; போதையில் இளைஞரின் வெறிச்செயல்!.

Intoxicated young man's frenzy The incident of the woman who went to drink

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயது பெண். இவர், அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற இந்த பெண் திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த குடும்பத்தினர் அப்பெண்ணை அக்கம் பக்கத்தில் தேடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் அப்பெண் கிடைக்கவில்லை. இதனால், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இதற்கிடையில், நேற்று முன் தினம் (03-04-24) வரதராஜா லே- அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் நிர்வாண நிலையில், அந்த பெண் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு வந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்ருதஹள்ளி போலீசார், அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அந்த பிரேத பரிசோதனையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த சி.சி.டி.வி பதிவில், அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்குள்அந்த பெண் செல்வதும், சிறிது நேரம் கழித்து அந்த பெண் வெளியே வரும் போது ஒரு இளைஞர் அவரை பின்தொடர்ந்து வருவதும் இருந்துள்ளது.

இதனையடுத்து, அந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது கரண் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. அதன் பேரில், சம்பந்தப்பட்ட குற்றவாளியான கரணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 2ஆம் தேதி வரதராஜா லே- அவுட் அருகே உள்ள மதுபான கடையில் கரண் மது குடித்துள்ளார்.

அப்போது, அந்த பெண்ணும் கடைக்கு வந்து மது அருந்தியுள்ளார். மது அருந்திய பின்பு, அந்த பெண் வெளியே வந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். இதனை கண்ட மதுபோதையில் இருந்த கரண், அப்பெண்ணை கட்டிடத்திற்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு நிற்காமல், அந்த பெண்ணை கழுத்தை நெரித்தும், அடித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe