jammu kashmir

Advertisment

ஜம்மு காஷ்மீர், அனந்த்தாக் மாவட்டத்தில் இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்குமிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிலவி வந்தது.

முந்த்வார்ட் என்னும் பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்மிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அந்த பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடிவருகின்றனர். பலியான தீவிரவாதிகளிடம் இருந்து, ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு படையினர் அனந்த்தாக் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபள்ளதால், அங்கு இணையசேவை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.