Advertisment

விவசாயிகள் போராட்டம்: இணைய சேவை முடக்கத்தை நீட்டித்தது மத்திய அரசு!

farmers

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகப் போரட்டம்நடத்தி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்றுட்ராக்டர்பேரணி நடத்தினர். இதில்வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சிலவிவசாய அமைப்புகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தன.இருப்பினும் பல்வேறு விவசாயஅமைப்புகள், டெல்லிஎல்லையில் தொடர்ந்து போராட்டத்தைதொடர்ந்து வருகின்றன.

Advertisment

இந்தநிலையில் 29 ஆம் தேதி விவசாயிகளை எல்லையில் இருந்து வெளியேறக் கோரி, அவர்களின்டென்ட்டுகளைக் கிழிக்கஒரு கும்பல்முயன்றது. இதனால்,இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துக் கலவரமாக மாறியது. பிறகு, போலீஸார்தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும்நிலையைக் கட்டுக்குள்கொண்டுவந்தனர்.

Advertisment

இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும்சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரிஎல்லைகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று (31.01.21) இரவு 11 மணி வரை இணையசேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அந்த பகுதிகளில் செய்யப்பட்ட இணையசேவைமுடக்கம் நாளை (02.02.2021) இரவு 11 மணிவரைதொடரும் எனமத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Delhi farm bill Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe