smirti irani

Advertisment

பாஜகவைச் சேர்ந்தநாடாளுமன்றஉறுப்பினர் ஸ்மிருதிஇரானி. இவர் மத்தியஜவுளி மற்றும்பெண்கள்குழந்தைகள் மேம்பாட்டுத் துறைஅமைச்சராகவும் பதவி வகித்துவருகிறார்.

இந்தநிலையில், சர்வதேசத் துப்பாக்கிச் சுடும்வீராங்கனைவர்திகா சிங்,மத்திய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராவதற்குப் பணம் கோரியதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும்மேலும்இருவர் மீது குற்றம் சாட்டிநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மத்திய அமைச்சரின் இரண்டு உதவியாளர்களான விஜய் குப்தா மற்றும் ரஜ்னிஷ் சிங் ஆகியோர், தன்னை மத்திய பெண்கள்ஆணையத்தில் உறுப்பினராக்குவதற்கு முதலில் 1 கோடி ரூபாய் கேட்டதாகவும், பின்னர் அதனைக் குறைத்து, 25 லட்சம்ரூபாய் கேட்டதாகவும், அவர்களில் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும்குற்றம்சட்டியுள்ள வர்திகா சிங், தன்னைஅந்த ஆணையத்தின் உறுப்பினராக நியமித்துப் பொய்யானகடிதம் ஒன்றையும் அவர்கள் அளித்ததாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

Advertisment

ஏற்கனவேகுற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரானவிஜய்குப்தா, வர்திகாசிங் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி, தன் மீது அவதூறு பரப்ப முயல்வதாகக் காவல் துறையிடம்புகார் அளித்திருப்பதும், அதனைத்தொடர்ந்து வர்திகாசிங்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.