Published on 01/08/2024 | Edited on 01/08/2024

பட்டியலின இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ஈ.வி. சின்னையா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் இடஒதுகீட்டின் போது உள் ஒதுக்கீட்டைக் கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தார். கடந்த 2005 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதனை உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பஞ்சாப் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7 நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் 6 நீதிபதிகள் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.