காபி டே நிறுவனத்திற்கு தற்காலிக தலைவர் நியமனம்...

கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் நேற்று திடீரென மாயமான நிலையில் இன்று காலை அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

interim director appointed for cafe coffee day

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்த அவர் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காபி டே நிறுவனத்தின் தற்காலிக தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்த இவர், தற்போது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நிதின் பக்மானே நியமிக்கப்பட்டுள்ளார். காபி டே நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

coffee day karnataka
இதையும் படியுங்கள்
Subscribe