Advertisment

இடைக்கால பட்ஜெட்; விவசாயிகளுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை, வருமானம் இரட்டிப்பாக நடவடிக்கை...

gfhgfh

Advertisment

இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வாசித்து வருகிறார். இதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இந்த 6000 ரூபாய் 3 தவணைகளாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும் எனவும்இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

interim budget Parliament
இதையும் படியுங்கள்
Subscribe