காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு மற்றும் பெட்ரோலிய துறை ஒப்பந்தங்களில் பணம் பெற்றது,19 லட்சம் பவுண்ட் செலவில் அவர் லண்டனில் வீடு வாங்கியது தொடர்பான இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.5 லட்சம் பிணைத் தொகை செலுத்தி ஜாமீன் வாங்கிக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.