2007- ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chidamba.jpg)
இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை இரவு ப.சிதம்பரம் சிபிஐ யினால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் (ஆகஸ்ட்- 26 வரை) நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய திங்கட்கிழமை வரை இடைக்கால தடை விதித்து அவருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
Follow Us