விவசாயிகளுக்கான விவசாயக் கடன் வட்டி 7 சதவீதத்திலிருந்து 9.25 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

 Interest rates  hike for agricultural jewelery loan ...

3 லட்சம் வரையிலான குறுகியகால கடனுக்கு 9.25 சதவீதமும் வட்டியும், 3 லட்சத்திற்கும் மேலான கடனுக்கு 9.50 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இனி 7 சதவீத வட்டியில் விவசாய நகைக் கடன் வழங்கக் கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

11% நகைக் கடன் வட்டியில் வழங்கப்பட்டு வந்த 4 சதவீத மானியம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயிகளாக இல்லாதவர்கள் விவசாய நகை கடன் பெற்று வருவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.1முதல் வழங்கப்பட்ட விவசாய நகைக்கடன் வட்டி உயர்த்தி 2020 இல் ஏப்.ஒன்றுக்குள் வசூலிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment