Advertisment

உளவுத்துறை எச்சரிக்கை... எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்!!

drone

Advertisment

சமீப காலமாகவே ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அதிகாரப்பூர்வமற்ற ட்ரோன்கள் பறப்பது அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ராணுவத்தினர் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (23.07.2021) ஜம்மு காஷ்மீர் கனசாக்கில் வெடிபொருட்களுடன் சுற்றியட்ரோனைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். எல்லையில் சுற்றிய ட்ரோன்சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதிலிருந்த வெடி பொருட்களைக் கைப்பற்றி இராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அடுத்த மாதம் சுதந்திர தினம் என்பதால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் கண்காணிப்புகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Drone jamu kashmir
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe