Advertisment

ஏப்ரல் -1 முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு

auto

Advertisment

2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு. 350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும். 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

Advertisment

20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த ஆண்டை விட ரூ.8 ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும். 40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

vehicles from April 1st charges Insurance
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe