Skip to main content

ஏப்ரல் -1 முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு

Published on 30/03/2018 | Edited on 31/03/2018
auto

 

2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 

 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு. 350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும்.  2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த ஆண்டை விட ரூ.8 ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும். 40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

செல்போனுக்கு சார்ஜ் செய்த போது நேர்ந்த சோகம்; மாணவன் உயிரிழப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The tragedy happened while charging the cell phone; College student lose their live

ராமநாதபுரத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி கல்லூரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவன் அமுத கிருஷ்ணன். சம்பவத்தன்று அமுத கிருஷ்ணன் தன்னுடைய மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மாணவன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவனை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவன் அமுத கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

மொபைல் போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு; வாகனங்களைப் பழுது பார்க்க உதவி எண்கள் அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
'Miqjam' storm damage; Notification of helpline numbers for repairing vehicles

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களைப் பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் 1800 2100 007 என்ற எண்ணிற்கும், யமாஹா வாடிக்கையாளர்கள் 1800 4201 600 என்ற எண்ணிற்கும், டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் 1800 2587 555, ஹோண்டா வாடிக்கையாளர்கள் 1800 1033 434 என்ற எண்ணிற்கும், சுசூகி வாடிக்கையாளர்கள் 1800 1217 996 என்ற எண்ணிற்கும், மாருதி சுசூகி வாடிக்கையளர்கள் 1800 1800 180 என்ற எண்ணிற்கும், லாண்சன் டொயோடா வாடிக்கையளர்கள் 1800 1020 909 மற்றும் 1800 2090 909 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கியா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் 1800 1085 000 என்ற எண்ணிற்கும், ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் 1800 1024 645 என்ற எண்ணிற்கும், டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் 1800 209 8282 என்ற எண்ணிற்கும், டொயொட்டா வாடிக்கையாளர்கள் 1800 102 50001 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'Miqjam' storm damage; Notification of helpline numbers for repairing vehicles

இது மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், டிவிஎஸ், மாருதி, ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளன. சில நிறுவனங்கள் வாகன பழுதுபார்ப்புக்கு நடமாடும் சிறப்பு குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வாகன பாதிப்பு மதிப்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இழப்பீடு தர காப்பீட்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் புகைப்படங்கள், பழுது நீக்கம் செய்ததற்கான ரசீதுகள் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்கள்  காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.