/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/reelsni.jpg)
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ஆன்வி கம்தார் (27). இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை கொண்ட ஆன்வி கம்தார், ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, நீர்வீழ்ச்சியின் அருகே அவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதில் பதற்றமடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், பள்ளத்தில் விழுந்த ஆன்வி கம்தாரை தீவிரமாக தேடி வந்தனர். ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுஅவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதித்தினர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது பள்ளத்தில் விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)