இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு நேற்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. நேற்று பயிற்சியில் இருந்த போது வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் சோதனைக்காக அழைத்து சென்றனர்.அப்போது பும்ராவுக்கு இரண்டு கட்டங்களாக சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் முதலில் சிறுநீர் சோதனையும் அதனை தொடர்ந்து 45 நிமிடங்கள் கழித்து ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டகாக கூறுகின்றனர்.

Advertisment

jasprit bumrah

இந்த சோதனை குறித்து வெளியான தகவலை மைதான அதிகாரிகளும், இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.நாளை இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்னும் சோதனை குறித்து அறிக்கை வராமல் இருப்பது இந்திய வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பும்ராவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைக்காக காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.