இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அணுசக்தியால் இயங்கி, கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்ற நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். அரிஹந்த் இந்தியாவின் வலிமைக்கு சான்றாக விளங்குகிறது. அதனை உருவாக்கி அதற்கென பணியாற்றிய அனைத்து பிரிவினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.