Initial training of the Agnipath project... launch at the border!

Advertisment

இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்தது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு முதற்கட்ட பயிற்சி துவங்கியுள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அக்னிபத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் முதற்கட்ட பயிற்சி தொடங்கியது. ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பாரமுல்லா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பயிற்சி துவங்கியது. சக்ரா, உருசா உள்ளிட்ட எல்லையை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளில் இந்த பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.