Skip to main content

வஞ்சத்துடன் கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி

Published on 21/05/2018 | Edited on 21/05/2018

காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதிலடிகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் இராணுவத்தின் பதுங்கு குழிகளை தாக்கி அழித்தது. அதுமட்டுமின்றி அழித்ததற்கான வீடியோ பதிவையும் இந்திய இராணுவம் அண்மையில் வெளியிட்டது. இந்த பதிலடியால் திணறிய பாகிஸ்தான் இராணுவம் ஜம்முவில் உள்ள எல்லை பாதுகாப்புப்படை முகாமை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

india

 

 

 

 

india

 

இதனால் இந்திய இராணுவம் தாக்குதலை கைவிட்டது. ஆனால் தாக்குதல் கைவிடப்பட்ட அடுத்த சிலமணி நேரத்திலேயே கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள இந்திய இராணுவ நிலைகளை நோக்கி அத்துமீறிய தாக்குதலை மீண்டும்  நடத்தியது.


 

india

 

அந்த தாக்குதலில் சிறிய மோட்டர் ரக குண்டுகளை பயன்படுத்தியதாகவும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இந்திய இராணுவ எல்லை பாதுக்காப்புபடையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் எல்லைமீறி தாக்குதல் நடத்தப்பட்டால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் எனவும் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய எல்லை பாதுக்காப்புப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.