Advertisment

ஏர்டெல் நிறுவனத்தில் 13 வருடம் அனுபவம் கொண்டவர் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி...!

இந்தியாவின் இரண்டாம் பெரும் தகவல் தொழில்நுட்பம் நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நிலஞ்சன் ராய் (Nilanjan Roy) நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

i

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த எம்.டி ரங்கநாத் கடந்த நவம்பர் 16, 2018 அன்று தன் பதவியில் இருந்து வெளியேறினார். அதன் பின் இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக ஜெயேஷ் சங்க்ராஜ்கா நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 17 நவம்பர் 2018 முதல் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்று அந்தப் பதவியில் செயல்பட்டுவந்தார்.

தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிலஞ்சன் ராய் வரும் 2019-ம் ஆண்டு, மார்ச் மாதம், 1-ம் தேதி முதல் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே இடைக்கால தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் ஜெயேஷ் சங்க்ராஜ்கா, அவரின் பொறுப்பில் இருந்து வெளியேறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நிலஞ்சன் ராய் இதற்குமுன் ஏர்டெல் நிறுவனத்தில் உலகளாவிய தலைமை நிதி அதிகாரியாக பணி புரிந்துள்ளார். மேலும் ஏர்டெல் நிறுவனத்தில் 13 வருடங்களும், யூனிலிவர் நிறுவனத்தில் 15 வருடங்களும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Infosys
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe