n

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இன்ஃபோசிஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி, புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் மேன்மேலும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். மேலும், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (AI) எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்று கூறுவதையும் யாரும் நம்பத் தேவையில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மேலும் பல வேலை வாய்ப்புகள்தான் உருவாகும் என்றார். உலக பொருளாதார கூட்டமைப்பு (WEF) அறிக்கை அபரிமிதமான இயந்திர வளர்ச்சி மற்றும் அல்கோரிதம் ஆகியவற்றால் 13.30 கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளதையும் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.