JJ

யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக முன்னதாக தகவல்கள், செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வெளியான தகவலுக்கு மத்திய அரசு முழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்தவிளக்கத்தையும்மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisment

அதில் '2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை. அவ்வாறு வெளியாகும் தகவல் முற்றிலும் பொய்யானது. தொடர்ந்து யுபிஐ வழியாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது' எனதெரிவிக்கப்பட்டுள்ளது.